Monday, 8 September 2025

கருவுறுதல் திருமூலரின் திருமந்திரம் ரகசியம்

 

திருமூலரின் திருமந்திரம் இரண்டாம் தந்திரம்
கருஉருவாதல் பாடல். 451-490

தெய்வத்தமிழ் தூதர் என்று அழைக்கப்பட்ட திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இந்த உலகத்தில் வாழும் மனிதஇனம் அழியாமல் இருக்க இனப்பெருக்கம் மிகவும் முக்கியமானதாகும் என்பதைப் பற்றி 40 பாடல்கள் எழுதியுள்ளார். அதில் ஆணும் பெண்ணும் இணைந்து காமசுகத்தை அனுபவிக்கும்போது   பெண்ணினுடைய வயிற்றில் கரு உருவாகிறது. அந்தக்கரு எப்படி உருவாகிறது எந்த மாதிரியான ஒரு குழந்தையை இறைவன்/ ஈசன் அருளால் கருவிலே உருவாக்கி அவனை ஒரு சிறந்த ஞானியாகவோ வல்லவனாக எப்படி பெற்றுக் கொள்வது  என்பதைப் பற்றி  திருமூலர் 40 பாடல்களில் விளக்கியுள்ளார்.

தெய்வப்புலவர் என்று அழைக்கப்படும் திருவள்ளுவர் மூன்றாம் அதிகாரம் காமத்துப்பாலில் 25 அதிகாரங்களில் 250 குறட்பாக்களை இயற்றியுள்ளார். அதில் மனித இனம் அழியாமல் இருக்க இந்த காமம் என்று சொல்லப்படும் ஆண் பெண் சேர்க்கை மிகவும் முக்கியமானதாகும்.  ஒரு ஆண் பெண் மீது ஏற்படும் காதலால் உண்டாகும் நன்மை தீமைகள் என்ன என்பதை பற்றி விளக்குகிறார்.

திருமந்திரத்தையும் திருக்குறளையும் இணைத்து கரு உருவாகுதல் பற்றி உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல   வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படும். பின்னர் புத்தகமாக வெளியிடப்படும். மேலும் இந்த புத்தகம் எழுத முக்கியமாக பெண்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் பெண்கள்  உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எளிதாக இளைய தலைமுறையினர்  புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கருவுருவாதல் பாடல்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

தற்போதைய இந்த 21ம் நூற்றாண்டில்  உலக மக்களின் குடும்ப வாழ்க்கை முறையில்  முக்கியமாக உணவுப் பழக்க வழக்கங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

அதற்குக் காரணம் வெளிநாட்டு உணவு பழக்க வழக்க முறைகள் எளிதாக இந்நாட்டில் புகுத்தப்பட்டு அதற்கு அடிமையாக மக்கள் மாறிவிட்டார்கள். முக்கியமாக அசைவ உணவுடன் மைதா கலந்த உணவு பொருட்களையும் குளிர்பானங்களையும் அருந்துவதால்  திருமணமான பிறகு  குழந்தைகள் பெற்றுக்கொள்ள அல்லது அவர்களது வாரிசுகளை உருவாக்க நிறைய பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது. மேலும் ஆண் பெண் இருபாலரும் திருமணம் செய்யக்கூடிய வயதும்  அதிகம் ஆகிவிட்டது. அதாவது 50 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண் பூப்படைந்த உடன் 21 அல்லது 23 வயதுக்குள் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டாள்.  ஆனால் தற்போதைய காலகட்டத்தில்  2000 ஆண்டு முதல் பெண்களுடை திருமணம்  25 முதல் 30 வயதிற்குள்தான் நடக்கிறது. அதற்குப் பின் மேலைநாட்டுக் கலாச்சாரத்தை பின்பற்றி குழந்தை பெறுவதற்கு சில ஆண்டுகளை மேலும் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து கரு உருவாமல் போவதற்கு அடிப்படை காரணமாக உள்ள அந்த மேலைநாட்டு உணவு பழக்க வழக்க முறைகளால் தடைபடுகிறது.

முக்கியமாக வலிபர்கள் மாமிசத்தையும் மதுவையும் முக்கிய உணவாக உண்பதால்  அவர்களது மனநிலையிலும், உடலிலுழ் நிறைய  மாற்றங்கள் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளாமல் உண்டு  வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதனால் ஆண் பெண் உடலுறவில் நிறைய ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இளம் வயதினருக்கு இம்போட்டன்சி என்று கூறப்படும் இயலாமைநிலை ஏற்பட்டு கரு உருவாகாமல் குழந்தைகள் பெற முடியாமல் உள்ளனர். அதனால் இன்றைய காலகட்டத்தில் மழையில் முளைத்த காளான்கள் போல நிறைய கருத்தரிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

எனவேதான் 8000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் என்ற ஒரு ஞானி திருமந்திரம் என்ற புத்தகத்தில் இரண்டாம் தந்திரத்தில் கரு உருவாதல் என்ற ஒரு அதிகாரத்தில் இதைப் பற்றி எளிமையாக விளக்கியுள்ளார். அதாவது எந்த தொழில் நுட்ப சாதனங்களும் இல்லாத காலகட்டத்தில் ஒரு பெண்ணினுடைய உடலில் ஏற்படும் மாற்றங்களை குறித்து மிகவும் துல்லியமாக பாடியுள்ளார்.  பின்னர் அதை சிற்ப வடிவமாகவும் செதுக்கி பல கோவில் தூண்களிலும்  வடிவமைத்துள்ளார்கள்.

இந்த  விடயம் உலக மக்களுக்கு தெரியாமலேயே போய்விட்டது.  எனவே இனி  இதை எப்படி எதிர்கொள்வது என்பதற்காக இந்த நூலில் விரிவாக எழுதப்படும்.  கரு உருவாகாமல் போனால் மனித இனம் அழிந்து போய்விடும். உதாரணமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  டைனோசர் எனப்படும் விலங்குகளை பற்றி கேள்விப்பட்டு தான் உள்ளோம். ஆனால் அது தற்போது இல்லை.

இந்த மனித இனம் தழைக்க அதைக் காப்பதற்காகவே  2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தெய்வப் புலவர் என்றழைக்கப்படும் திருவள்ளுவரும் காமத்துப்பாலில் 250 குறட்பாக்கள் இயற்றியுள்ளார். 

இந்த பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருள் இறைவன் மனித இனத்தையும் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவனின் தூதனாக மனித உருவில் பல ஞானிகளையும், சித்தர்களையும் படைத்து அவர்கள் எழுதிய இந்த நூல்களின் மூலம் எளிதாக உலக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதை  நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.  இந்த புத்தகங்களில் உள்ள கருத்துக்களை ஒப்பீடு செய்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற நோக்கில் . ஒரு குழுவாக இணைந்து  திருமூலரின் திருமந்திரத்தில் உள்ள கரு உருவாதல் என்னும்  அதிகாரத்தில் உள்ள பாடல்களை உலக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான விளக்கங்களை எழுத  எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். இதை புலணக் குழுவில் அவ்வப்போது இந்தப் பாடல்களுத்காண விளக்கங்கள் அளிக்கப்படும். பின்னர் அதை நூல் வடிவமாக விரைவில் வெளியிடப்படும்.

நன்றி
எம்எஸ்கே மனோகரன்
எம்ஏ வரலாறு  கோவை.
திருமந்திரம் திருக்குறள் ஆய்வாளர்

Thursday, 12 June 2025

திருமந்திரம் 451
இரண்டாம் தந்திரம் அத்தியாயம் 14
கரு உருவாதல்.

ஆக்குகின்றான் முன்பிரிந்த  இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் வனாதி எம் ஆருயிர்
ஆக்குகின்றான் கர்ப்ப கோளகை யுள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவதறிந்தே

விளக்கம்:- திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு பெண்ணினுடைய வயிற்றில்  கரு எப்படி உருவாகிறது அல்லது எந்த மாதிரி குழந்தையை கருமூலம் உருவாக்க முடியும் என்பதைப் பற்றி 40 பாடல்கள் மூலம் விளக்குகிறார். ஆண்குழந்தை, பெண் குழந்தை, புத்திசாலியான குழந்தை இரட்டைக் குழந்தைகள் பெறவும், அல்லது திருநங்கை, மாற்றுத் திறனாளி குழந்தைகள்  பிறக்கக் காரணம் என்னவென்று விரிவாகப் பாடியுள்ளார். இப்படியாக திருமூலர்  ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கான வழிகளைக் கூறுகிறார். உடலிலுள்ள 96 தத்துவங்களில் தனஞ்செய் வாயு மட்டும் மனிதன்  இறந்த பிறகு உடலிலிருந்து 72 மணிநேரம் கழித்துத்தான் தலைப்பின் கபாலத்தை பிளந்து தனஞ்செய் வாயுவானது வெளியே போகும். பிறகுதான் உடல் ஆழுக/ கெட்டுப் போக ஆரம்பிக்கும்.

அ).ஆக்குகின்றான் முன்பிரிந்த  இருபத்தஞ்சு:-
ஈசன் இந்த மனித உயிரை ஆக்குகின்றான் அல்லது படைக்கின்றான். மனிதன் முற்பிறவியில் வாழ்ந்த பொழுது அவனுடைய உயிர் உடலிலிருந்து  பிரிந்த பொழுது 96 தத்துவங்களும் அழிந்து விடும். மேலும் கீழ்க்கண்ட 25 தத்துவங்களைக் கொண்டு  ஒரு உயிரை உருவாக்க அடிப்படை காரணமாக உள்ளது எனத் தெரியவருகிறது. அந்த உயிரை அல்லது ஆத்மாவை   மீண்டும் உருவாக்குகிறான். அதுதான் கருவுருவாதல் ஆகும்.

இறைவன் இந்த கருவை உருவாக்கும் பொழுது ஒரு உயிருக்குத் தேவையான 96 தத்துவங்களை கொண்டு ஒரு உயிரை உருவாக்குகிறார்.  அதில் இந்த 25 தத்துவங்கள் அடிப்படையாக உள்ளது. அவை என்னவென்றால்
பூதம் 5,+ புலன் 5,+ ஞானேந்திரியம் 5,+ கன்மேந்திரியாம் 4, +
காரணம் 4, +புருடன் 1+ உயிர் 1ஆக மொத்தம் 25 ஆகும்.

ஒரு பெண்ணின் வயிற்றில்  கருவாக உயிர் பெற  மேற்கண்ட 25 தந்திரங்களும் இறைவனால் உருவாக்கப்படுகிறது. அவை என்ன என்று பார்ப்போம்.

அ) பூதம் 5 அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. நீர்,நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் அண்டத்தில்/பிரபஞ்சத்தில் உள்ளது. ஒரு மனிதனின் உடலில் அல்லது பிண்டத்தில் நிலமாக உடலும், அந்த உடலில் நீர் அல்லது ரத்தம் உள்ளது, அந்த உடல் எப்பொழுதும் கதகதவென்று ஒரு வெப்பத்தை கொடுத்துக் கொண்டுள்ளது அது நெருப்பு ஆகும். சுவாசக் காற்று மூலம் பிராணவாயுவை எடுத்துக் கொள்கிறது. இவை அனைத்தும் ஆகாயம் எனப்படும் பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மனிதனைப் பொறுத்தவரை இரண்டு வகையான செயல்பாடுகள் மிகவும் முக்கியமானவையாகும்.

ஆ)புலன் 5.  மெய்யுறுப்புகளாகிய உடல்,
கண், காது, மூக்கு, வாய் இந்த ஐம்புலன்கள் மூலம் பார்த்தல்,  உணர்தல், சுவைத்தல், செவி மூலம் கேட்டல் போன்ற செயல்கள் ஆகும்.
இரண்டாவது அவைகள் மூலம் அவன் செயல்படுதல்.

இ)இந்திரியங்கள் என்றால் சக்தி அல்லது திறன் என்று பெயர். அந்த சக்திக்கு பெயர்தான் இந்திரியம். அதனால் தான் அர்த்தநாரீஸ்வரர் என்ற தத்துவத்தில் உடலில் பாதி சிவனாகவும் பாதி சக்தியாகவும் உள்ளார் எனத் தெரிய வருகிறது.  அதாவது நேர்மறை எண்ணங்கள் கொண்ட செயல்பாடு ஆகும்.

ஈ)ஞானேந்திரியம் என்றால் ஞானத்தின் மூலம் கிடைக்கும் ஞானசக்தி ஆகும். அது மனிதனின் வெளியுலக வாழ்க்கையில் பல விடயங்களை கற்றுணர்ந்து, தேர்ந்து அறிவு பெறுவதற்காண வழிமுறைகள் ஆகும். அதாவது ஞானம் பெறுவதற்கு இறைவன் நமக்கு ஐந்து மெய்யுருப்புகளை/ பொறிகளை கொடுத்துள்ளான். இந்த உறுப்புகள் இருந்தால் மட்டும் போதாது அதன் பணியை சரியாகச் செய்யும் சக்தி/ திறனையும் (இந்திரியம்) உடையதாக இருக்கவேண்டும். எனவே இந்த ஐந்து செயல்களும் சரியாகச் செயல்படச் செய்யும் உறுப்புக்களுக்கு ஞானேந்திரியம் என்று பெயர்.

உ)கர்மேந்திரியம். நமது புறச்செயல்களுக்கு, நாம் செய்யும் காரியங்களுக்கும், கர்மாவிற்கும் பயன்படும் உறுப்புகள் கை, கால், வாய், கருவாய், எருவாய் என ஐந்தாகும். இவை ஐந்தும் இருந்தால் மட்டும் போதாது அவைகள் செயல்படும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். அந்த செயல் திறனுக்கு காரணமான இந்த ஐந்து உறுப்புகள் மூலம் செய்யப்படும் காரியங்களுக்கு கர்மேந்திரியம் ஆகும்.

ஊ)புருடன் என்றால் பரமாத்மா, பேருயிர், சிவான்மா ஆகும். இறைவன் அந்த உயிரில் குடி புகுந்து வாழ்கிறான். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள்.

எ)காரணம் 4. இந்த பிரபஞ்சத்திற்கான மூலப்பொருள்பஞ்சபூதங்கள் . இந்த மூலப்பொருள்களின் அடிப்படையில்தான் இந்த உலகத்திற்கும் அதில் நடைபெறும் நிகழ்வுகள் ஆக்கல், அழித்தல், காத்தல்  அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது.

ஏ) உயிர்:- மேற்கண்ட 25 தத்துவங்களை உள்ளடக்கியதுதான் ஒரு உயிர் ஆகும்.

ஆ)ஆக்குகின்றான் வனாதி எம் ஆருயிர் :-  வனாதி என்றால் வானளாவிய ஆதி முதல் அந்தம்வரை உள்ள இறைவன் இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களை படைக்கின்றான்.
எம் ஆருயிர் என்றால் அரிதான இந்த உயிர் கருவில் உருவாகக் காரணமாக ஈசன் இருப்பதால் அதை எம் உயிர் என்கிறார்.  அதனால்  தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள். ஆறறிவைக் கொண்ட உணர்வுகளை அந்தக் கருவுக்குள் அறு மூலாதாரங்களையும் ஆக்குகின்றார்.

இ)ஆக்குகின்றான் கர்ப்ப கோளகை யுள்ளிருந்து:-  கோளகை என்றால் உருண்டையான, அண்டம், கோள் எனப் பொருள்படும். அந்தக் கோளகைக்குள் ஒரு உயிரை/கருவை ஆண் பெண் இனச் சேர்க்கை மூலம் ஒரு பிண்டத்தை ஒரு பெண்ணின் வயிற்றில்  உருவாக்குகிறார்.
மேலும் அந்த குழந்தை இந்த பிரபஞ்சத்தில் வந்து பிறக்கும் பொழுது அப்பொழுது  கோள்களின் சுழற்சியின்
தன்மையைப் பொறுத்து அந்த குழந்தையின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது எனத் தெரிய வருகிறது.

ஈ)ஆக்குகின்றான் அவன் ஆவதறிந்தே;- ஒரு குழந்தையை ஈசன் உருவாக்குகின்றான். அந்தக் குழந்தை என்னவாக ஆக வேண்டும், என்ன செய்ய வேண்டும், இந்த உலகத்திற்கு  இந்தப் பிறவியின் பயன் உள்ளதா இல்லையா என்பதை இறைவன் முன்பே தீர்மானித்து அந்த கருவுக்குள் புகுந்து அந்த பிண்டத்தை ஆக்குகின்றான். அப்படி இந்த உலகில் தோன்றியவர்கள் தான் மகா சித்தர்கள் அவர்கள் இறைவனின் தூதர்களாக  இந்த உலக மக்களுக்காக  நன்மைகள் பல செய்து அல்லது அதை எழுத்து மூலமாக உருவாக்கி உள்ளனர். மேலும் தீமைகளையும் அழித்து நல்வழிகாட்டுதலாக இருந்து அவர்களால் எழுதப்பட்ட அந்த இலக்கியங்கள், பல காப்பியங்கள் உள்ளன. அவைகளே  அகத்தியம், திருமந்திரம், திருக்குறள், திருவாசகம்,தேவாரம் போன்ற அனைத்து படைப்புகளும் இறைவனால் மனிதன் மூலம் படைக்கப்பட்டவையே ஆகும் அதை ஒரு பெண்ணின் கருவிலேயே முன்பே தீர்மானித்து வள்ளலார் போன்ற தெய்வக் குழந்தைகளை உருவாக்கி இந்த உலகம் மக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் விட்டுச் சென்ற வழிநடத்தல் இந்த நூல்களின் மூலம் ஆறறிவு படைத்த மனிதர்கள் அதை உணர்ந்து தெளிந்து படித்து அதன் மூலம் இறைவனை அடைய வழிகாட்டுதலாகும்.

அத்தகைய சக்தியாக, ஞானக் குழந்தைகளை பெற்றிறெடுக்கக் கூடிய திறனை இறைவன் மனிதர்களுக்குள் அதாவது ஆண் பெண் இருவருக்குள் வைத்துப் படைத்துள்ளான்.  அவர்களுடைய பால் உணர்வுகள் மூலம் பிறப்பது தான் இந்த கருவில் உருவாக்கப்படும் ஞானக் குழந்தைகள் ஆவார்கள்.

எனவே இந்த தத்துவத்தை எளிதில் சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாது. காரணம் நாம் இளமை பருவத்தில் வாழுகின்ற வாழ்க்கையில் இத்தகைய தத்துவங்களை எடுத்துக் கூற அல்லது படித்துப் பார்க்க அல்லது நமது எண்ணங்களுக்குள் வர ஏதாவது ஒரு ஞான சக்தி வேண்டும். அவர்கள்தான் இத்தகைய நூல்களைப் படித்து புரிந்து தெளிந்து இந்த மாதிரியான குழந்தைகளை நாமும் பெற்றெடுக்க முடியும் என்று யார் உணர்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த கரு உருவாதல் என்னும் அதிகாரத்தில் எழுதியுள்ள பாடல்கள் தத்துவங்களை உணர்ந்து கொள்ள முடியும்.
இனிவரும் காலங்களிலாவது இந்த உலகம் உலகத்தில் உள்ள மக்கள் அழியாமல் இருக்கவும் அவர்களை வழிநடத்தவும் ஒரு ஞானக் குழந்தை வேண்டும். எத்தனையோ மனிதர்கள் பிறந்தாலும் இறந்தாலும் அவர்கள் எல்லாம் ஞானக்குழந்தையாக முடியாது. கோடான கோடியில் ஒருவன் தான் இறைவனால் அந்தக் கருவில் உருவாக்கி அந்த ஞானக் குழந்தையை உலகிற்கு அளிக்கிறான். அதற்கு உதாரணமாக இந்த உலகத்தில் வாழ்ந்து இறைவனை உணர்ந்து மோட்சம் அடைந்த பல ஞானிகளை நம்மால் கூற முடியும் நமக்கு மிக மிக நெருங்கிய தொடர்புடைய காலத்தில் 1823-1874 வரை இந்த உலகில் வாழ்ந்து மறைந்தவர் அருட்பிரகாச வள்ளலார் ஆவார். இதைவிட ஒரு சிறந்த உதாரணம் வேறு இல்லை. எனவே மானிடர்களே உங்களுக்கு எத்தன்மை வாய்ந்த, திறனுடைய, அறிவுடைய, ஞானமுடைய குழந்தையை பெற வேண்டும் என்ற  தத்துவத்தை பின்வரும் 40  பாடல்களில் விளக்குகிறார். இதை பின்பற்றி முயற்சி செய்து அத்தகைய ஞானக் குழந்தையை பெறுவதற்கு இறைவனுடைய அருளை முதலில் பெற வேண்டும்.

இந்த அடிப்படை தத்துவத்தை உணர்ந்து ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இன்பத்தை அனுபவிக்கும் பொழுது அடிப்படை விடயங்களை புரிந்து கொண்டு அவர்களது மணவாழ்க்கையில் ஈடுபட்டால் அவர்கள் நினைத்த போன்ற ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்ற தத்துவத்தை இந்த பாடல்கள் மூலம் விளக்குகிறார்.

எம்எஸ்கே மனோகரன்
திருக்குறள் திருமந்திரம் ஆய்வாளர். கோவை 

THIRUKKURAL AMUTHAM

தினமும் ஒரு குறள் எனற தலைப்பில் திருக்குறள் எழுதி வருகிறேன். 16/1/2018ம் தேதி முதல். 


 குறள் 1


அகர முதல எழுத்தெல்லாம்;ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம்: எழத்துகளெல்லாம் 'அ' எழுத்தை தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன அதுபோல உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன.   MSK வின் விளக்கம்:-      ஆதி என்றால் சூரியன். சூரிய ஒளி இல்லை என்றால் உலகம் முழுவதும் இருளாக இருக்கும். எனவே ஆதி யை பகவான் என்றார். அகரம் எழுத்துகளின் முதல் எழுத்து. உலகத்தில் இந்த இரண்டும் கண்களை போன்றது.  நமது இரண்டு  கண்களையும் மூடிபார்த்தால் ஒன்றும் தெரியாது  ஆனால்   அறிவு என்ற அகக்  கண்களையும் திறந்து பார்த்தால் ஞானம் கிடைக்கும் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்
[ உயிர்கள் வாழ சூரிய ஒளி தேவை ஒளி இல்லை என்றால் உயிர்கள் வாழ முடியாது.  மரம் செடி முதல் அழியும்.  உலகம் முழுவதும் இருளாக இருக்கும். அ எழுத்து மூலம் மணிதன் எழுத்து அறிவு பெற்றான். எனவே இவை இரண்டும் உலகம் முழுக்க தேவை உலகம் முழுக்க அறிவு ஜீவிகள் ஆக முடியும்
[0 இடைகாலத்தில் வந்தவர்கள் ஆரியர்கள்  திருவள்ளுவரை ஆதி என்ற புலய பெண்ணிற்கும் பகவன் என்ற அந்தணர்க்கும் பிறந்தவர் என்று புணையப்பட்ட கதை தான்.  அவரை தாழ்த்தி காட்ட. இது என் தனிப்பட்ட கருத்து எனக்குள் தோன்றிய எண்ணம்.  வாழ்க வள்ளுவம் வளர்க பகுத்தறிவு சிந்தனை இங்கணம் MSK நாயனார் கோவை

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்கம்:-
ஒருவர் கற்ற கல்வியின்  ஞானத்தை., கலையை, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் to share your knowledge to others. இல்லை என்றால் அவன் கற்றுக் கொண்ட கல்வியால் பயன் இல்லை.  கற்ற கல்வியின் மூலம் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். அதுமட்டுமல்லாமல் கற்றுக் கொண்ட நெறியை உருவாக்குவது அதை எல்லோரும்  பின்பற்றி நடக்க அறிவுறுத்த  வேண்டும்.  அதுமட்டுமல்லாமல்  இறைவனுடைய The Creator ரையும்  நிணைத்து அடிகளைத் தொழுதல் வேண்டும். வணக்கம் MSK  நாயனார்

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.       
MSK விளக்கம்;-  இந்த பூமியில் உள்ள மணிதர்கள் பிறக்கும் போது குழந்தை யாக இருக்கும் போது ""குழந்தையும் தெய்வமும்  குணத்தால் ஒன்று "" அதாவது கடவுள் படைக்கும் போது  மணிதனை  மலர் போன்ற மென்மையான மணதுடன் படைத்தான். ( ஏகினான்) அதன் பிறகு அவன் செய்த கர்ம வினை தான் ஆட்டுவிக்கிறது எனவே இறைவன் Creator அடியை (மாணடி) நிணைப்பவர்கள் தொழுபவர்கள்  ( நிலமிசை) இந்த பூமியில் நீண்ட காலம் வாழ்வர். உ.ம். போகர் போன்ற சித்தர்கள்

 குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

MSK:- இவ்வுலகில் வாழ ஒவ்வொரு மனிதனும் மண்/பொன்/பெண் ஆசை மற்றும்  பொருள்/ பணத்தை சம்பாதிக்க வேண்டும் ஆனால் அதற்கு ஒரு எல்லை இல்லை. ஆசை மற்றும்  பணம் மனிதனுடைய வேண்டுதல்.  பணம்  மற்ற பொருள்களை  பற்றி ஆசைப்படாமல் அவைகளை வேண்டாமல் ""போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து "" என்று  இருப்பவர்கள் இறைவன்( Creator) அடியை நினைத்து மனதை ஒருநிலை படுத்தி  வழிபாடு செய்தால் ( இடும்பை) என்ற  துன்பம் வாழ்க்கையில் இருந்து      விலகும்.
                                      
   குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

MSK  விளக்கம்:- அறியாமை மூடநம்பிக்கை என்ற இருள் மற்றும் தீவினை செயல்கள் ஆகிய இரண்டும் மனிதனிடம் இருந்தால் அது இறைவனை சென்றடைய  அடைய வழி அல்ல. உண்மையான மெய்யன்புடன இறைவனை நினைவு கூர்ந்து தொழுதால் அவர் அருள் கிடைக்கும். 

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

MSK  விளக்கம்:- அறியாமை மூடநம்பிக்கை என்ற இருள் மற்றும் தீவினை செயல்கள் ஆகிய இரண்டும் மனிதனிடம் இருந்தால் அது இறைவனை சென்றடைய  அடைய வழி அல்ல. உண்மையான மெய்யன்புடன இறைவனை நினைவு கூர்ந்து தொழுதால் அவர் அருள் கிடைக்கும். 


காமத்தில் அறம்

 திருக்குறள் ஆய்வு.

 அறத்துப்பால்

அதிகாரம்-- 1. கடவுள்வாழ்த்து. 

குறள் எண் 1.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகலவன் முதற்றே உலகு

பொதுவான விளக்கம்: எழத்துகளெல்லாம் 'அ' எழுத்தை தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன. அதுபோல உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன. 


முக்காலும் உணர்ந்து, தொலைநோக்கு அறிவு கொண்டு தெய்வ புலவர் திருவள்ளுவர் எழுதிய குறட்பா உலகப்பொதுமறையாக விளங்குகிறதுஎன அனைவரும் அறிந்ததே ஆகும்.

எம்எஸ்கே சாமி விளக்கம்:

உயிர் என்றால் என்ன என்று அனைவரும் அறிந்ததே. ஒரு சீவனுக்கு உயிர் இல்லாவிட்டால் அது உபயோகமற்ற தாகும் அது கண்ணுக்குத் தெரியாத உயிரினமாக இருந்தாலும் அல்லது தாவரங்களாக இருந்தாலும் உயிர் இல்லாவிட்டால் அந்த பொருளுக்கு அல்லது உடலுக்கு உபயோகமற்றதாகிவிடும். அதனால் அந்த முதல் எழுத்தாகிய ""அ"" உயிர் என்றால் மிகையாகாது அதனால்தான் அஆஇஈஉஊஎஏஐஒஓஔ வரை உள்ள எழுத்துக்களை உயிரெழுத்து என்றார்கள்.

இந்தப் பன்னிரண்டு எழுத்துக்கள் இல்லாவிட்டால் உலகத்திலுறள்ள எல்லா எழுத்துக்களும்  இதை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது.


1.அகரம்:- என்பது 

 "அ உ அம்"  என்ற இந்த மூன்று எழுத்துக்கள் ஒன்றாக சேர்ந்ததுதான் அகரம் எனப்படும் முதல் எழுத்து "அ" என்பதாகும்.

இவ்வுலகில் பிறந்த குழந்தை முதன் முதலில் வாய்திறந்து பேசக்கூடிய  வார்த்தை "அம்மா" என்ற சொல்லாகும். இதை அடிப்படையாகவைத்து தற்போதைய காலகட்டத்தில் அனைத்து உலக மக்களும் வழக்குச் சொல்லாக உபயோகித்து வருகிறார்கள். 'மா' என்று ஹிந்தியிலும் மோம், மேம், மேடம் என உலகிலுள்ள எந்த மொழியில் பேசினாலும் அம்மா என்ற சொல் அடிப்படை சொல்லாக இருப்பதால் அதை அகரத்தில் ஆரம்பித்தார்.


2.முதல எழுத்தெல்லாம்:-  ""அ"" என்ற முதல்  எழுத்து மூலம் மனிதன் எழுத்து அறிவு பெற்றான். இவ்வுலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ""அ"" முதல் எழுத்து ஆகும். 


 3.ஆதி :- என்றால் சூரியன். இவ்வுலகில்  சூரிய ஒளி இல்லை என்றால் உலகம் முழுவதும் இருளாக இருக்கும். இயற்கையின் சுழற்சியில் இரவு பகல் உண்டாகிறது. உயிர்கள் வாழ சூரிய ஒளி தேவை. தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை உணவு தயாரிக்க சூரிய சக்தி தேவை.  எனவே ஆதியை, சூரியனை பகவான் என்றார். 


உலகத்திற்கு அ+ஆதி

அ. ஆ என்ற இரண்டாம் உயிர் எழுத்தும் குறித்து விட்டார்.

 சூரியனும்+அ  என்ற முதல் எழுத்து = இந்த இரண்டும் இன்றியமையாத சக்தியாக உலகத்தில் நிலை பெற்றுள்ளது.   மனிதர்களும் மற்ற  பிற அனைத்து  உயிர்களும் இரண்டு கண்களை கொண்டுள்ளது. அதுபோல சூரியசக்தி + அகரம் என்ற எழுத்தும்   இவை இரண்டுமே இரண்டு கண்களைப் போன்றது.  நமது இரண்டு  கண்களும் இல்லை என்றால் இருளாக இருக்கும். அல்லது கண்களை  மூடிபார்த்தால் ஒன்றும் தெரியாது. 

ஆனால்   அறிவு என்ற அகக்கண்களை திறந்து பார்க்க எழுத்தறிவு தேவை. அதைப் படிக்கும் அறிவு மூலம்  ஞானம் கிடைக்கும். பிறகு மனிதர்கள்   எதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார். 

4.முதற்றேஉலகு:- உயிர்கள் வாழ சூரிய ஒளி அவசியம்  தேவை. ஒளி இல்லை என்றால் உயிர்கள் வாழ முடியாது மரம் செடி கொடி முதல் எல்லாம்  அழியும்.  உலகம் முழுவதும் இருளாக இருக்கும்.  எனவே இவை இரண்டும் இவ்வுலகிற்கு அவசியம் தேவை  


மேலும் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் சோதிட சாஸ்திரம் அனைத்திற்கும் சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களும் காரணமாக  இயங்கு கின்றது. இதனால் மனிதர்களுக்கு அறிவு கண் திறக்கும் பிறகு அவர்கள் அறிவு ஜீவிகளாக முடியும். இதுமனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்து வருகிறது என்றால் மிகையாகாது என்கிறார். 

காலையில் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறையும் வரை மறுநாள் மீண்டும் சூரியன் தோன்றும் வரை உள்ள கால அளவை கணக்கிட்டு ஒரு நாள் என அக்காலத்திலேயே ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். மனிதர்களுக்கு தனது வாழ்க்கையில் ஒரு நாள் கழிந்து விட்டால் தன்னுடைய வாழ்நாளின் ஆயுளில் ஒருநாள் குறைந்துவிட்டது என்றால் மிகையாகாது என்கிறார்.


★சூரியன் தான் இந்த உலகத்தில்  இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் உயிர் கொடுப்பவர்.


★சூரியனைச் சார்ந்துதான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் நாமும் இருக்கின்றோம்.


★இந்தப் பிரபஞ்சத்திற்கு அதிபதி அவர் தான்.


★நமக்கெல்லாம் உயிர் கொடுத்தது நமது தந்தை,அதனால்தான் சூரியன் தந்தைக்கு காரகத்துவமான கிரகம்.


★நமக்கு உயிர் கொடுப்பது தந்தை என்பதால் சூரியனை தந்தைகாரகன் என்று குறிப்பிட்டார்கள்.

★நமக்கெல்லாம் மறுபிறவி கொடுப்பவர் சூரியன் தான்.

இதனால்தான் மருத்துவத்திற்கு சூரியன் அதிபதி.

★நமக்கு உயிர் கொடுக்க வேண்டுமா அல்லது கொடுக்கக் கூடாதா என்பதை தீர்மானிப்பவர் சூரியன்தான்.


உட்கருத்து:- *சூரியன் இல்லாமல் உலகம் இல்லை, ”அ" என்ற எழுத்து இல்லாமல் மொழியும் இல்லை*.

நந்தீஸ்வரர்

 அன்பே சிவம் ..

 ஓம் நமசிவாய  சிவாய நம..

ஓம்.


*நந்தி என்றால் ? 


1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.


திருமூலரின் திருமந்திரம் பாடல் எண்.78

நந்தி யருளாலே நாதனாம் பேர் பெற்றே

நந்தி யருளாலே மூலனை நாடினே

நந்தி யருளாலே தென்செயு நாட்டினி

நந்தி வழிகாட்ட நானிருந்தேனே


விளக்கம்:- நந்தி என்ற பெயர் இனிவரும் பாடல்களிலும் நந்தியை முன்னிறுத்தி திருமூலர் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். இந்த  நந்தியின் வரலாறு என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.


  சிலாதனன் என்ற முனிவர் ஒரு குழந்தை வேண்டும் என்று பல வருடங்கள் தவமிருந்தால்

சிவபெருமான் அந்த முனிவருக்கு காட்சி தந்து என்னுடைய அம்சங்கள் அனைத்தும் கொண்ட ஒரு குழந்தை உனக்கு கிடைக்கும் 

ஆனால் அந்தக் குழந்தை எட்டு  ஆண்டுகள்தான் வாழும். எனக்கூறி மறைந்து விடுகிறார். 

அதன்படி ஒரு பேலையில் ஒரு குழந்தையைக் காண்கிறார். அது மிகவும் பிரகாசமாக சிரித்துக் கொண்டு இருக்கிறது. இது சிவனுடைய அருள் என்று நினைத்து அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வருகிறார் ஆனால் அந்தக் குழந்தை எட்டு வருடத்தில் இறந்துவிடுமே என்று வருத்தப்படுகிறார். சிலாதன முனிவரின் வருத்தத்தை உணர்ந்த அந்தக் குழந்தை, தந்தையே வருத்தப்பட வேண்டாம் நான் சிவபெருமானைப் பூசித்து, தவம் செய்து வரம் பெறுவேன் எனக் கூறிவிட்டு ஈசனை நினைத்து கடுமையான தவத்தில் அந்த 8 வயதுக் குழந்தை ஈடுபடுகிறது. ஈசன் அந்த எட்டு வயது குழந்தைக்கு தரிசனம் கொடுத்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு நான் எப்பொழுதும் எம்பெருமானாக ஈசனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்  மேலும் தங்களிடம் உள்ள அனைத்து சக்திகளும் எனக்கும் வேண்டும் என ஈசனிடம் கேட்கிறார். ஈசன் அனைத்து சக்திகளையும் தர முடியாது ஆனால்  என்னிடம் வருபவர்கள், பூசிப்பவர்கள், தவம் செய்வார்கள் என அனைவரும் முதலில் உன்னை பார்த்து உன்னுடைய அனுமதி பெற்ற பிறகு என்னிடம் வந்தால் அவர்களுக்கு அருள் புரிவேன் என்ற வரத்தை கொடுக்கிறேன் என்கிறார். மேலும் நான் இருக்கும் இடங்களில் எல்லாம் நீ  என் முன்னே இருப்பாய் எனவும் நீ காளை ரூபத்தில்  அமர்ந்திருப்பாய் என வரமளிக்கிறார். பின்னர் அந்த குழந்தை நந்தி என்ற பெயரிலும் நந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.


நந்தி என்றால் ஆனந்தம்,       

பேரானந்தம், அருள் வளர்தல், அன்பு வளர்தல், நம்பிக்கை வளர்தல்,  என்ற பல பொருள்கள் உள்ளது. அதனால் அவரை  நந்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

சிவனை மகிழ்விக்க நந்தீஸ்வரர் மத்தளம் இசைக்கிறார் அதனால் அவள் முன்னே  ஈஸ்வரன் நடனம் ஆடுகிறார். அதைக் கண்டு களிக்க பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தேவர்களும் வந்து பார்க்கிறார்கள். ஆனால் நந்தீஸ்வரர் சிவனுடைய ஆட்டத்திற்கு ஏற்ப அவரும் முன்னே பின்னே நகர்ந்து மத்தளம் வாசிப்பதால் யாருக்கும் சிவனுடைய தரிசனம் கிடைக்கவில்லை. அதனால் இந்த நந்தி நம் முன்னே நின்று மறைக்கிறாரே என்பதைத்தான் மனிதர்கள் செய்யும் எந்த செயல்பாடுகளிலும் தடை ஏற்பட்டால் நந்தி மாதிரி என் முன்னே வந்து மறைக்கிறாய் என்ற வழக்குச் சொல் பின்னர் உருவானது. மேலும் எந்த சிவாலயங்களுக்குச்  சென்றாலும் முதலில் நந்தீஸ்வரரை வணங்கி அவரிடம் அனுமதி பெற்று அருள் பெற்று பின்னர் ஈசனை தரிசனம் செய்ய  வேண்டும் என்பது தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் அந்த தேவ ரிஷிகள் சிவனுடைய ஆட்டத்தை காண முடியாமல் நந்தியின் கொம்பு இடையில் மட்டும் சிவனை சிறிது தரிசனம் செய்ய இடம் கிடைக்கிறது. அதனால் தான் சிவன் கோயிலில்  நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே முதலில் சிவனை தரிசித்து விட்டு பின்னர் கோயிலுக்குள் செல்கிறார்கள். இதைக்  கடைபிடித்து வருகின்றோம். இப்படிப்பட்ட சக்தி கொண்ட நந்தி எனப்படும் நதீஸ்வரர் மகா குருவாக நினைத்து எல்லா முனிவர்களும் முதலில் வணங்குகிறார்கள். அதில் முதல் எட்டு முனிவர்கள் நந்தீஸ்வரரை குருவாக வணங்கி ஈசனின் அருள் பெறுகிறார்கள். அவர்களின் மூத்த சிவ ஞானியாக கருதப்படுபவர் அகத்தியர்,வியாக்ரமர், பரஞ்சோதி, திருமூலர் இவர்களுக்கு பின் சனகர், சனந்தர், சனாதனர், சனந்தகுமார்,  என்ற நாலு முனிவர்களும் மொத்தம் எட்டு பேர் உலகில் உள்ள அனைத்து  முனிவர்களுக்கும் குருவாக உள்ளார்கள். இனிவரும் பாடல்களில் நந்தி என்று பல சொற்கள் வரும் அந்த நந்தீஸ்வரர் இவரே ஆவார். 


அ)நந்தி அருளாலே நாதனாம் பெயர்:- நந்தி திருமூலரின் குருவாக உள்ளார் எனவே முதலில் குரு மூலமாகத்தான் எந்த ஒரு ஞானத்தையும் அருளையும் பெற முடியும் அதற்குப் பிறகுதான் ஈசனின் தரிசனம் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்பதால் குருவை முதலில் வணங்க வேண்டும்.


ஆ)நந்தி யருளாலே மூலனை நாடினே; நந்தி எனப்படும் நந்தீஸ்வரர் அருளாலே நான் மூலனாக மாறினேன். அதனால்  கருவில் மூலத்தைப் போல இந்த உலக மக்கள் வாழ்வதற்கான மூலகாரணங்களை திருமந்திரம் மூலம் எழுதியதால் என்னை மூலர் என்று பெயரிட்டார் இது என்னுடைய குருவின் அருளால் ஆகும் என்கிறார். பிற்காலத்தில் மூலர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்று ஒரு கதையை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதாக. தான் இருக்க வேண்டும்


இ)நந்தி யருளாலே தென்செயு நாட்டினி:- நந்தியின் வரலாறு நந்தி தேவரின் அருளாலே நான் வடநாட்டிலிருந்து தென்னாடு சென்றேன். பூமியில் மக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு ஒரு மனிதனாக அவதரித்து மக்களின் நன்மைகளை உணர்ந்து தீமைகளை என் துன்பங்களையும் களைய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது தான் இந்த திருமந்திரம் என்கிறார்.


ஈ)நந்தி வழிகாட்ட நானிருந்தேனே:- திருமூலராகிய நான் எனது குரு தேவனான நந்தி வழிகாட்ட நான் இந்த திருமந்திரத்தை எழுத மூல காரணமாகியவராக உள்ளார் என்பதால் தானே அவருடன் இருந்தேனே என்கிறார்.


திருமூலர் எழுதிய மந்திரம் என்னும் திருமந்திரம் மனிதர்களுக்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வழிபாட்டு முறைகளையும் 

அனைத்தையும் இந்த நூலில் மிகவும் அழகாக பாடியுள்ளார்.


 வருடத்திற்கு ஒரே ஒரு பாடல் என்று 3000 பாடல்கள் எழுதி 3000 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, தவமிருந்து 8000 பாடல்கள் பல தலைப்புகளில் எழுதியுள்ளார்....


இந்த திருமந்திரம் என்னும் புத்தகத்தை பற்றி அறிந்து கொள்வதற்கும இறைவனுடைய அருள் வேண்டும். 


நந்தீஸ்வரர் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 


2. நந்தியின் வேலை  இவர் அனுமதி பெறாமல் ஈசன் உள்ள இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.


3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.


4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.


5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.


6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.


7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.


8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.


9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.


10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.


11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.


13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.


14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.


15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.


17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.


18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.


19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.


20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.


21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.


22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.


23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.


24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், 

திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.


25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.


26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.


27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்


28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.


29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.


30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.


31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.


32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.


33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.


34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.


35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.


36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.


37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.


38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.


39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.


40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.


41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.


42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.


43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.


44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.


45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.


46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.


47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.


48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.


49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.


50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் சிறந்து விளங்கும்...


திருமந்திரத்திற்கு இன்னொரு பெயர் தனித்தமிழ் ஆகமம் என்றும் மந்திரம் என்பதற்கு நினைப்பவரை காப்பது நினைப்பவரை காக்க வல்லது என்றும் ஆகமம் என்றால் ஆகி நின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க என்றதால் திருமந்திரம் சிவ சொரூபம் ஆகும் திருமந்திரம் தாய் எனவும் ஏனைய திருமுறைகள் அதன் சேய் எனவும் கூறுவர் திருமந்திரத்தை பொருள்நூல் எனவும் கூறுவர்  இதன் பெருமை அளவிட முடியாது


தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி....


நமசிவாயம் வாழ்க 

நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க.......


அவனன்றி அணுகும் அசையாது......

எல்லாம் அவன் செயல்...


சாதாரண மனிதனாக பிறந்து இவ்வுலக வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களை அனுபவித்து பின்னர் இறைவனின் சக்தியை உணர்ந்து அந்த இறை சக்தியை தனக்குள் வரவழைக்க அதற்க்குரிய மந்திரங்களை ஓதி பல நாட்கள் மாதங்கள் வருடங்கள்எனத் தவமிருந்து ஒரு மனிதன் சித்தனாகவும் புத்தனாகவும் ஞானியாகவும் மாறுகிறான்..


சாதாரண மனிதர்களாகிய நாம் மேற்கூறியபடி சித்தர் ஆகாவிட்டாலும்  ஆறறிவு படைத்த மனிதனாக  பிறந்ததற்கு  ஈசனுடைய அருளையாவது பெற வேண்டும். 


தெய்வத்தமிழ் தூதர் இறைவனின் தூதர் என்று அழைக்கப்படும் மூலர்

திருமூலர் எழுதிய திருமந்திரம் பாடலுக்கான விளக்கங்கள் அளிக்கப்படும். 


இறைவனை மூலவர் என்று அழைக்கிறோம். 

வேறு எந்த மனிதரையும் மூலர் என்று அழைப்பதில்லை ஆனால் திருமந்திரம் எழுதிய மூலரை திருமூலரை படைத்தது ஈசன் தான் என்பதை நாம்  உணர்ந்து கொள்ள முடிகிறது....


 இவ்வுலகில் உள்ள நூல்களுக்கெல்லாம் மூலநூல் திருமூலர் எழுதிய திருமந்திரம் ஆகும்...


சித்தர்களுக்கெல்லாம் சித்தர் ஆவார். ஈசனின் அருளைப் பெற்று பல வருடங்கள் கடும் தவம் செய்து ஈசனினிடம் நேரடியாக. தீட்சை பெற்றவர் மூலர் எனும் திருமூலர் ஆவார்.


இதை ஆராய்ந்து ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.


திருமூலரும் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்து சிறப்பாய்வு


இந்தப் புத்தகத்தில் திருமூலரின் வரலாறு திருவள்ளுவரின் வரலாறு இணைக்கப்பட்டுள்ளது. 


நூலாசிரியர் எம் எஸ் கே மனோகரன் கோவை

Valluva kula Anthanats

https://m.facebook.com/story.php?story_fbid=1596328720501632&id=100003735592292&sfnsn=scwspmo&s=100003735592292&vh=i

Tuesday, 11 July 2023

திருமந்திரம் 2

 திமந்திரம் பாடல் 3

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்


 நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்தோறும்


 பக்கநின் றார்அறி யாத பரமனைப்


 புக்குநின்று உன்னியான் போற்றி செய்வேனே...


விளக்கம்:- திருமூலர் திருமந்திரம் என்ற இந்த நூலை எழுதுவதற்கு தன்னை தானே இறைவனிடத்தில் அர்ப்பணித்து அதைப் பற்றி எழுதுகிறார்.


அ).ஒக்கநின் றானை:- இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒன்றாக ஒரே ஒருவனாக இருப்பவன் ஈசன்..

உலப்பிலி தேவர்கள்:- உலப்பு என்றால் அழிவு அதாவது இந்த உடலுக்கு அழிவு வராமல்  தேவர்களை காத்து இருப்பவனே..


ஆ).நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்தோறும்:-

நக்கன் என்றால் சிவன்

நாள்தோறும் சிவனையே ஈசனை நினைத்து ஏற்றுக்கொள். அதாவது உனது மனதுக்குள்ளே ஈசனை ஏத்திக்கொள் ஏற்றுக்கொண்டு ஈசனை வழிபாடு.


இ)மேற்றிசைக்குள் தென்திசைக்கொரு வேந்தனாம்.

விளக்கம்:- மேற்றிசைக்குள்:-  அதாவது மேற்கு கிழக்கு அதற்குப் பிறகு வடக்கு தெற்கு ஆகும்.

 இந்த பூமியை வட துருவம் தென் துருவம் என்று மட்டும்தான் பிரித்துள்ளார்கள். அதனால் தான் திருவள்ளுவரும் திருக்குறளில் தென்புலத்தார் என்று குறள் எண் 43 ல் பாடியுள்ளார்.. அப்படி என்றால் இந்த தென் திசைக்கொரு வேந்தனாம் என்று திருமூலர் எழுதியுள்ளார்.


ஈ).நான்கு திசைகள் ஆக பிரித்தாலும் தென்புலம் தெற்கு திசை என்ற ஒன்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.  திசைக்கு வேந்தனாம் ஈசன். அதனால் தான் தென்புலத்தார் என்றார் திருவள்ளுவர்.


மேலும் இயற்கையின் நியதிப்படி இயற்கையை படைத்த இறைவன் வடதுருவத்தில் பனி மூடி எல்லா நாட்களும் இருப்பதால் சாதாரண மனிதர்கள் அங்கு வாழ முடியாது வாழக் கூடிய சூழல் இல்லை. ஆனால் தென்புலம் என்று சொல்லப்படும் கன்னியாகுமரி வரை உள்ள இந்த தமிழக நிலப்பரப்பில் அனைத்து சித்தர்களும் வாழ்ந்தனர். அனைத்து கோவில்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டு வழிபட்டு வருகிறார்கள். தென்திசையில் மனிதர்கள் வாழக்கூடிய அனைத்து விதமான வசதிகளும் உள்ளதால் தென்புலத்தில் தான் முதன் முதல் உயிர்கள் தோன்றியிருக்க வேண்டும்.


 தற்போது உள்ள கன்னியாகுமரிக்கு கீழே குமரிக்கண்டம் என்ற ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது அதை கடல் அலைகள் ஆழிப்பேரலையால் மூழ்கடித்து விட்டன. அந்த நிலப்பரப்பு தான் தென்திசை ஆகும் என்கிறார். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே அதில் தோன்றிய உயிரினங்களும் மனிதர்களும் இந்த வனவியல் சாஸ்திரத்தை அறிந்து தெரிந்து இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. எனவே இந்த நான்கு திசைகளுக்கும் வேந்தன் ஆகவும் ஈசன் ஆக இருந்துகொண்டு இந்த உலகை ஆட்டி வைக்கிறான் என்று திருமூலர் கூறுகின்றார் எனலாம்.



[

3.பக்க நின்றார் அறியாத பரமனைப்..


இந்த பிரபஞ்சத்தில் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் ஈசனை உனக்குத் தெரியாது அவன் உன் பக்கத்தில் நின்றிருக்கிறார் அமர்ந்து இருக்கிறார் என்று அறியாத மனிதர்களே பரம் பொருளாகிய பரமனை பிரபஞ்சத்தை படைத்தவனை


4. புக்கு நின்று உன்னியான் போற்றிசெய் வேனே..

புக்கு என்றால்  வீடு, புகழிடம், தங்குமிடம், உடம்பு எனப் பொருள்படும். அதாவது இந்த உடம்பு தான் இறைவனுடைய வீடு புகலிடம் தங்குமிடம் ஆகும் என்கிறார்.

ஈசனே உன்னை யான் போற்றித் துதித்து வழிபட்டு இந்த நூலை படைக்கிறேன் என்கிறார்..