Saturday, 11 July 2020


குறள் 891:


பெரியாரைப் பிழையாமை

குறள் பால்: பொருட்பால். 
குறள் இயல்: நட்பியல். 
அதிகாரம்:91.
 பெரியாரைப் பிழையாமை.


குறள் 891:

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.


எம்எஸ்கே விளக்கம்:- ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவரும் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த அறிவாளிகளாக, ஞானிகளாக உடனே ஆவது இல்லை. அதற்கு பல வருடங்கள் ஆகலாம். அதிலும் ஒரு சிலரே பெரியோர் அல்லது சான்றோர் அல்லது அறிவுடையோர் ஆகிறார்கள் என அறிவோம்.


1.ஆற்றுவார் :- இந்த உலகில்
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு என தனித்தன்மை என்று சொல்லக்கூடிய தனிஆற்றல் தன்னம்பிக்கை வேண்டும்.
என்னால் ஆற்ற/செய்ய முடியும் ,ஆக்க முடியும், புதிய விஷயங்களை செயலாற்ற முடியும் என செயல்பட்டுவரும் மனிதர்களே ஆற்றுவார்கள்/ வல்லவர்கள் எனப்படுபவர்கள்.

2.ஆற்றல் :- என்றால் திறமை வல்லமை என தனித் தன்மையை கொண்ட மக்கள் ஆற்றல் உடையவர்கள் ஆவர்.
இவ்வுலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் பிறந்தார்கள் வாழ்ந்தார்கள் மறைந்தார்கள். ஆனால் யார் ஒருவர் தனது அறிவாற்றலை உலகிற்கு உபயோகப்படும் வன்னம் என்ன செய்து இருந்தார்களோ அவர்களே அறிவாற்றல் உடையவர்கள்.

உதாரணமாக தெய்வப்புலவர், அருணகிரிநாதர்,வள்ளலார் போன்றவர்களைச் சொல்லலாம்.

3.இகழாமை :- பலகோடி மக்களில் ஒரு சில சான்றோர்கள் இல்லாமல்  இவ்வுலகம் இல்லை. எனவே அவர்களைப் பற்றி இழிவாக  பேசுதலும் தூற்றுதலும் செய்யாமலும் அவர்களிடமே பிழையைக் காணாமல்  இருப்பதே அறிவுடைய மக்களின் சிறந்த பண்பாகும்.

4.போற்றுவார்:- அறிவுடைய சான்றோர்களை ஞானிகளை போற்றி அவர்களிடத்தில் உள்ள அறிவையும் வழிமுறைகளையும் எளிதாக பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.  ஒருவன் தானாக ஒவ்வொரு விஷயத்தையும் கற்று கஷ்டப்பட்டு பின்னர் தெளிவு அடைவதை விட அறிவுடைய சான்றோர்களை போற்றி அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை அடைய வேண்டும். 

5.போற்றலுள் எல்லாம் தலை.
ஒருவனைக் பாதுகாத்திட அவனுக்கு  அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும். அதாவது பெரியோர்களின் மனம் நோகாமல் அவர்களைப் பணிந்து போற்றி அவர்கள் சொல்லை பின்பற்றினால் வாழ்க்கையில் ஒரு நல்ல சிறந்த தலையாய நிலையை அடைய முடியும் என்பதே ஆகும்.

உட்கருத்து:- *சான்றோர்களின்/ அனுபவமுற்றவர்களின் பாடமே சிறந்த படிப்பினையாகும்*

Saturday, 7 March 2020

அனைவருக்கும்   திருக்குறள் வணக்கம்.



 தினமும் ஒரு குறள் எனற தலைப்பில்  திருக்குறளுக்கு



 இளையதலை முறையினர்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு 16/1/2018 முதல் எழுதி வருகிறேன்.



இன்று 781வது நாள் ஆகும்.  16/1/2018 தேதியிலிருந்து திருக்குறள் 1 ல் ஆரம்பித்து இன்று 771 வரை குறளுக்கு விளக்கம் எழுதியுள்ளேன்.

திருக்குறள் வணக்கம்.  
மறு ஆய்வு.

 அறத்துப்பால்
அதிகாரம்-- 1. கடவுள்வாழ்த்து. 

குறள் எண் 1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகலவன் முதற்றே உலகு.

பொதுவான விளக்கம்: எழத்துகளெல்லாம் 'அ' எழுத்தை தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன. அதுபோல உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன. 

முக்காலும் உணர்ந்து, தொலைநோக்கு அறிவு கொண்டு தெய்வ புலவர் திருவள்ளுவர் எழுதிய குறட்பா உலகப்பொதுமறையாக விளங்குகிறது
என அனைவரும் அறிந்ததே ஆகும்.

எம்எஸ்கே சாமி விளக்கம்:
உயிர் என்றால் என்ன என்று அனைவரும் அறிந்ததே. ஒரு சீவனுக்கு உயிர் இல்லாவிட்டால் அது உபயோகமற்ற தாகும் அது கண்ணுக்குத் தெரியாத உயிரினமாக இருந்தாலும் அல்லது தாவரங்களாக இருந்தாலும் உயிர் இல்லாவிட்டால் அந்த பொருளுக்கு அல்லது உடலுக்கு உபயோகமற்றதாகிவிடும். அதனால் அந்த முதல் எழுத்தாகிய ""அ"" உயிர் என்றால் மிகையாகாது அதனால்தான் அஆஇஈஉஊஎஏஐஒஓஔ வரை உள்ள எழுத்துக்களை உயிரெழுத்து என்றார்கள்.
இந்தப் பன்னிரண்டு எழுத்துக்கள் இல்லாவிட்டால் உலகத்திலுறள்ள எல்லா எழுத்துக்களும்  இதை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது.

1.அகரம்:- என்பது 
 "அ உ அம்"  என்ற இந்த மூன்று எழுத்துக்கள் ஒன்றாக சேர்ந்ததுதான் அகரம் எனப்படும் முதல் எழுத்து "அ" என்பதாகும்.
இவ்வுலகில் பிறந்த குழந்தை முதன் முதலில் வாய்திறந்து பேசக்கூடிய  வார்த்தை "அம்மா" என்ற சொல்லாகும். இதை அடிப்படையாகவைத்து தற்போதைய காலகட்டத்தில் அனைத்து உலக மக்களும் வழக்குச் சொல்லாக உபயோகித்து வருகிறார்கள். 'மா' என்று ஹிந்தியிலும் மோம், மேம், மேடம் என உலகிலுள்ள எந்த மொழியில் பேசினாலும் அம்மா என்ற சொல் அடிப்படை சொல்லாக இருப்பதால் அதை அகரத்தில் ஆரம்பித்தார்.

2.முதல எழுத்தெல்லாம்:-  ""அ"" என்ற முதல்  எழுத்து மூலம் மனிதன் எழுத்து அறிவு பெற்றான். இவ்வுலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ""அ"" முதல் எழுத்து ஆகும். 

 3.ஆதி :- என்றால் சூரியன். இவ்வுலகில்  சூரிய ஒளி இல்லை என்றால் உலகம் முழுவதும் இருளாக இருக்கும். இயற்கையின் சுழற்சியில் இரவு பகல் உண்டாகிறது. உயிர்கள் வாழ சூரிய ஒளி தேவை. தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை உணவு தயாரிக்க சூரிய சக்தி தேவை.  எனவே ஆதியை, சூரியனை பகவான் என்றார். 

உலகத்திற்கு அ+ஆதி
அ. ஆ என்ற இரண்டாம் உயிர் எழுத்தும் குறித்து விட்டார்.
 சூரியனும்+அ  என்ற முதல் எழுத்து = இந்த இரண்டும் இன்றியமையாத சக்தியாக உலகத்தில் நிலை பெற்றுள்ளது.   மனிதர்களும் மற்ற  பிற அனைத்து  உயிர்களும் இரண்டு கண்களை கொண்டுள்ளது. அதுபோல சூரியசக்தி + அகரம் என்ற எழுத்தும்   இவை இரண்டுமே இரண்டு கண்களைப் போன்றது.  நமது இரண்டு  கண்களும் இல்லை என்றால் இருளாக இருக்கும். அல்லது கண்களை  மூடிபார்த்தால் ஒன்றும் தெரியாது. 
ஆனால்   அறிவு என்ற அகக்கண்களை திறந்து பார்க்க எழுத்தறிவு தேவை. அதைப் படிக்கும் அறிவு மூலம்  ஞானம் கிடைக்கும். பிறகு மனிதர்கள்   எதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார். 
4.முதற்றேஉலகு:- உயிர்கள் வாழ சூரிய ஒளி அவசியம்  தேவை. ஒளி இல்லை என்றால் உயிர்கள் வாழ முடியாது மரம் செடி கொடி முதல் எல்லாம்  அழியும்.  உலகம் முழுவதும் இருளாக இருக்கும்.  எனவே இவை இரண்டும் இவ்வுலகிற்கு அவசியம் தேவை  

மேலும் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் சோதிட சாஸ்திரம் அனைத்திற்கும் சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களும் காரணமாக  இயங்கு கின்றது. இதனால் மனிதர்களுக்கு அறிவு கண் திறக்கும் பிறகு அவர்கள் அறிவு ஜீவிகளாக முடியும். இதுமனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்து வருகிறது என்றால் மிகையாகாது என்கிறார். 
காலையில் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறையும் வரை மறுநாள் மீண்டும் சூரியன் தோன்றும் வரை உள்ள கால அளவை கணக்கிட்டு ஒரு நாள் என அக்காலத்திலேயே ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். மனிதர்களுக்கு தனது வாழ்க்கையில் ஒரு நாள் கழிந்து விட்டால் தன்னுடைய வாழ்நாளின் ஆயுளில் ஒருநாள் குறைந்துவிட்டது என்றால் மிகையாகாது என்கிறார்.

★சூரியன் தான் இந்த உலகத்தில்  இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் உயிர் கொடுப்பவர்.

★சூரியனைச் சார்ந்துதான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் நாமும் இருக்கின்றோம்.

★இந்தப் பிரபஞ்சத்திற்கு அதிபதி அவர் தான்.

★நமக்கெல்லாம் உயிர் கொடுத்தது நமது தந்தை,அதனால்தான் சூரியன் தந்தைக்கு காரகத்துவமான கிரகம்.

★நமக்கு உயிர் கொடுப்பது தந்தை என்பதால் சூரியனை தந்தைகாரகன் என்று குறிப்பிட்டார்கள்.
★நமக்கெல்லாம் மறுபிறவி கொடுப்பவர் சூரியன் தான்.
இதனால்தான் மருத்துவத்திற்கு சூரியன் அதிபதி.
★நமக்கு உயிர் கொடுக்க வேண்டுமா அல்லது கொடுக்கக் கூடாதா என்பதை தீர்மானிப்பவர் சூரியன்தான்.

உட்கருத்து:- *சூரியன் இல்லாமல் உலகம் இல்லை, ”அ" என்ற எழுத்து இல்லாமல் மொழியும் இல்லை*.



நன்றி 





இங்கனம்  எம்எஸ்கே மனோகரன் நாயனார் எம். ஏ. எல்எல்பி.  எஸ்.எஸ்.பி. ஓய்வு.  கோவை.