குறள் 891:
பெரியாரைப் பிழையாமை
குறள் பால்: பொருட்பால்.
குறள் இயல்: நட்பியல்.
அதிகாரம்:91.
பெரியாரைப் பிழையாமை.
குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
எம்எஸ்கே விளக்கம்:- ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவரும் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த அறிவாளிகளாக, ஞானிகளாக உடனே ஆவது இல்லை. அதற்கு பல வருடங்கள் ஆகலாம். அதிலும் ஒரு சிலரே பெரியோர் அல்லது சான்றோர் அல்லது அறிவுடையோர் ஆகிறார்கள் என அறிவோம்.
1.ஆற்றுவார் :- இந்த உலகில்
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு என தனித்தன்மை என்று சொல்லக்கூடிய தனிஆற்றல் தன்னம்பிக்கை வேண்டும்.
என்னால் ஆற்ற/செய்ய முடியும் ,ஆக்க முடியும், புதிய விஷயங்களை செயலாற்ற முடியும் என செயல்பட்டுவரும் மனிதர்களே ஆற்றுவார்கள்/ வல்லவர்கள் எனப்படுபவர்கள்.
2.ஆற்றல் :- என்றால் திறமை வல்லமை என தனித் தன்மையை கொண்ட மக்கள் ஆற்றல் உடையவர்கள் ஆவர்.
இவ்வுலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் பிறந்தார்கள் வாழ்ந்தார்கள் மறைந்தார்கள். ஆனால் யார் ஒருவர் தனது அறிவாற்றலை உலகிற்கு உபயோகப்படும் வன்னம் என்ன செய்து இருந்தார்களோ அவர்களே அறிவாற்றல் உடையவர்கள்.
உதாரணமாக தெய்வப்புலவர், அருணகிரிநாதர்,வள்ளலார் போன்றவர்களைச் சொல்லலாம்.
3.இகழாமை :- பலகோடி மக்களில் ஒரு சில சான்றோர்கள் இல்லாமல் இவ்வுலகம் இல்லை. எனவே அவர்களைப் பற்றி இழிவாக பேசுதலும் தூற்றுதலும் செய்யாமலும் அவர்களிடமே பிழையைக் காணாமல் இருப்பதே அறிவுடைய மக்களின் சிறந்த பண்பாகும்.
4.போற்றுவார்:- அறிவுடைய சான்றோர்களை ஞானிகளை போற்றி அவர்களிடத்தில் உள்ள அறிவையும் வழிமுறைகளையும் எளிதாக பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒருவன் தானாக ஒவ்வொரு விஷயத்தையும் கற்று கஷ்டப்பட்டு பின்னர் தெளிவு அடைவதை விட அறிவுடைய சான்றோர்களை போற்றி அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை அடைய வேண்டும்.
5.போற்றலுள் எல்லாம் தலை.
ஒருவனைக் பாதுகாத்திட அவனுக்கு அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும். அதாவது பெரியோர்களின் மனம் நோகாமல் அவர்களைப் பணிந்து போற்றி அவர்கள் சொல்லை பின்பற்றினால் வாழ்க்கையில் ஒரு நல்ல சிறந்த தலையாய நிலையை அடைய முடியும் என்பதே ஆகும்.
உட்கருத்து:- *சான்றோர்களின்/ அனுபவமுற்றவர்களின் பாடமே சிறந்த படிப்பினையாகும்*
No comments:
Post a Comment