திருமூலரின் திருமந்திரம் இரண்டாம் தந்திரம்
கருஉருவாதல் பாடல். 451-490
தெய்வத்தமிழ் தூதர் என்று அழைக்கப்பட்ட திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இந்த உலகத்தில் வாழும் மனிதஇனம் அழியாமல் இருக்க இனப்பெருக்கம் மிகவும் முக்கியமானதாகும் என்பதைப் பற்றி 40 பாடல்கள் எழுதியுள்ளார். அதில் ஆணும் பெண்ணும் இணைந்து காமசுகத்தை அனுபவிக்கும்போது பெண்ணினுடைய வயிற்றில் கரு உருவாகிறது. அந்தக்கரு எப்படி உருவாகிறது எந்த மாதிரியான ஒரு குழந்தையை இறைவன்/ ஈசன் அருளால் கருவிலே உருவாக்கி அவனை ஒரு சிறந்த ஞானியாகவோ வல்லவனாக எப்படி பெற்றுக் கொள்வது என்பதைப் பற்றி திருமூலர் 40 பாடல்களில் விளக்கியுள்ளார்.
தெய்வப்புலவர் என்று அழைக்கப்படும் திருவள்ளுவர் மூன்றாம் அதிகாரம் காமத்துப்பாலில் 25 அதிகாரங்களில் 250 குறட்பாக்களை இயற்றியுள்ளார். அதில் மனித இனம் அழியாமல் இருக்க இந்த காமம் என்று சொல்லப்படும் ஆண் பெண் சேர்க்கை மிகவும் முக்கியமானதாகும். ஒரு ஆண் பெண் மீது ஏற்படும் காதலால் உண்டாகும் நன்மை தீமைகள் என்ன என்பதை பற்றி விளக்குகிறார்.
திருமந்திரத்தையும் திருக்குறளையும் இணைத்து கரு உருவாகுதல் பற்றி உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படும். பின்னர் புத்தகமாக வெளியிடப்படும். மேலும் இந்த புத்தகம் எழுத முக்கியமாக பெண்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் பெண்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எளிதாக இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கருவுருவாதல் பாடல்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
தற்போதைய இந்த 21ம் நூற்றாண்டில் உலக மக்களின் குடும்ப வாழ்க்கை முறையில் முக்கியமாக உணவுப் பழக்க வழக்கங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் வெளிநாட்டு உணவு பழக்க வழக்க முறைகள் எளிதாக இந்நாட்டில் புகுத்தப்பட்டு அதற்கு அடிமையாக மக்கள் மாறிவிட்டார்கள். முக்கியமாக அசைவ உணவுடன் மைதா கலந்த உணவு பொருட்களையும் குளிர்பானங்களையும் அருந்துவதால் திருமணமான பிறகு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அல்லது அவர்களது வாரிசுகளை உருவாக்க நிறைய பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது. மேலும் ஆண் பெண் இருபாலரும் திருமணம் செய்யக்கூடிய வயதும் அதிகம் ஆகிவிட்டது. அதாவது 50 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண் பூப்படைந்த உடன் 21 அல்லது 23 வயதுக்குள் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டாள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 2000 ஆண்டு முதல் பெண்களுடை திருமணம் 25 முதல் 30 வயதிற்குள்தான் நடக்கிறது. அதற்குப் பின் மேலைநாட்டுக் கலாச்சாரத்தை பின்பற்றி குழந்தை பெறுவதற்கு சில ஆண்டுகளை மேலும் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து கரு உருவாமல் போவதற்கு அடிப்படை காரணமாக உள்ள அந்த மேலைநாட்டு உணவு பழக்க வழக்க முறைகளால் தடைபடுகிறது.
முக்கியமாக வலிபர்கள் மாமிசத்தையும் மதுவையும் முக்கிய உணவாக உண்பதால் அவர்களது மனநிலையிலும், உடலிலுழ் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளாமல் உண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதனால் ஆண் பெண் உடலுறவில் நிறைய ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இளம் வயதினருக்கு இம்போட்டன்சி என்று கூறப்படும் இயலாமைநிலை ஏற்பட்டு கரு உருவாகாமல் குழந்தைகள் பெற முடியாமல் உள்ளனர். அதனால் இன்றைய காலகட்டத்தில் மழையில் முளைத்த காளான்கள் போல நிறைய கருத்தரிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவேதான் 8000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் என்ற ஒரு ஞானி திருமந்திரம் என்ற புத்தகத்தில் இரண்டாம் தந்திரத்தில் கரு உருவாதல் என்ற ஒரு அதிகாரத்தில் இதைப் பற்றி எளிமையாக விளக்கியுள்ளார். அதாவது எந்த தொழில் நுட்ப சாதனங்களும் இல்லாத காலகட்டத்தில் ஒரு பெண்ணினுடைய உடலில் ஏற்படும் மாற்றங்களை குறித்து மிகவும் துல்லியமாக பாடியுள்ளார். பின்னர் அதை சிற்ப வடிவமாகவும் செதுக்கி பல கோவில் தூண்களிலும் வடிவமைத்துள்ளார்கள்.
இந்த விடயம் உலக மக்களுக்கு தெரியாமலேயே போய்விட்டது. எனவே இனி இதை எப்படி எதிர்கொள்வது என்பதற்காக இந்த நூலில் விரிவாக எழுதப்படும். கரு உருவாகாமல் போனால் மனித இனம் அழிந்து போய்விடும். உதாரணமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் எனப்படும் விலங்குகளை பற்றி கேள்விப்பட்டு தான் உள்ளோம். ஆனால் அது தற்போது இல்லை.
இந்த மனித இனம் தழைக்க அதைக் காப்பதற்காகவே 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தெய்வப் புலவர் என்றழைக்கப்படும் திருவள்ளுவரும் காமத்துப்பாலில் 250 குறட்பாக்கள் இயற்றியுள்ளார்.
இந்த பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருள் இறைவன் மனித இனத்தையும் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவனின் தூதனாக மனித உருவில் பல ஞானிகளையும், சித்தர்களையும் படைத்து அவர்கள் எழுதிய இந்த நூல்களின் மூலம் எளிதாக உலக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த புத்தகங்களில் உள்ள கருத்துக்களை ஒப்பீடு செய்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற நோக்கில் . ஒரு குழுவாக இணைந்து திருமூலரின் திருமந்திரத்தில் உள்ள கரு உருவாதல் என்னும் அதிகாரத்தில் உள்ள பாடல்களை உலக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான விளக்கங்களை எழுத எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். இதை புலணக் குழுவில் அவ்வப்போது இந்தப் பாடல்களுத்காண விளக்கங்கள் அளிக்கப்படும். பின்னர் அதை நூல் வடிவமாக விரைவில் வெளியிடப்படும்.
நன்றி
எம்எஸ்கே மனோகரன்
எம்ஏ வரலாறு கோவை.
திருமந்திரம் திருக்குறள் ஆய்வாளர்