Monday, 26 August 2019
குறள் 451: ( நாள்)
குறள்பால்: பொருட்பால்.
குறள் இயல்:அரசியல்.
அதிகாரம்:46. சிற்றினஞ்சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
எம் எஸ் கே விளக்கம்:- ஆறறிவு கொண்ட மனிதனுக்கு தான் எந்த இன மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற பகுத்தறிவு வேண்டும். இளம் சிறியவர்கள் பச்சை மரத்தை போல எளிதில் வளையும் தன்மை குணத்தில் இருக்கும். அதனால் தீய எண்ணம் கொண்ட இன மக்களுடன் தவறாக சேர்ந்துவிட்டால் எளிதில் அவர்களுடைய குணம் அதேபோல மாறிவிடும்.
1.சிற்றினம் அஞ்சும்:- சிற்றினம் என்றால் குழந்தையாக பிறந்து 18 வயது வரை மனிதனாக மாறும் வரை உள்ள காலத்தை சிற்றினம் அதாவது இளமை காலம் எனலாம். இக்காலத்தில் சிறுவர்களின் இதயமும் எண்ணமும் மிகவும் மிருதுவானது. களிமண் ஈரத்துடன் இருக்கும்போது அழகான சிற்பமாகவும் மாற்றமுடியும் எந்த வடிவம் வேண்டுமானாலும் செய்ய முடியும். அதனால் சிறுவயதில் உள்ளவர்களை மிகவும் கவனமாக கையாண்டு வளர்க்க வேண்டும் அதனால்தான் சிற்றினம் ==தீய ஒழுக்கங்கள் உடைய இன மக்களாகிய சிற்றினம் கண்டு அஞ்ச வேண்டும் என்கிறார். காரணம் என்னவென்றால்
2. பெருமை சிறுமைதான்:-
இளைஞர்கள் தனது அறியா பருவத்தில் சிறுமையை பெருமையாக எடுத்துக் கொள்வார்கள். அதாவது தீய பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுடன் சிறுவர்களும் சேர்ந்து பழகும் பொழுது தீய ஒழுக்கங்கள் சிறுவர்களுக்கு சாதகமாக எளிதாக மனதில் பதிந்து கெட்ட பழக்க வழக்கமாக மாறிவிடும்.
2.சுற்றமாச் சூழ்ந்து விடும்.:-
எனவேதான் அவர்களை வளர்க்கும் சுற்றுச்சூழல் நல்ல விதமாக இருக்க வேண்டும் *இளமையில் கல்* என்றார்கள் அதுபோல இளமைப் பருவத்திலே எல்லாவகையான கலைகளையும் நூல்களையும் கற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். அவன் சிறந்த குடிமகனாகவும் நல்லொழுக்கம் உடையவனாகவும் எதிர்காலத்தில் சான்றோராகவும் மாற முடியும்.
உட்க்கருத்து:- பெரியோர்கள் ஒழுக்கமற்ற தவறான இயல்புடைய இனத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்கிவிடுவர். ஆனால் சிறியோர் இயல்பு அந்த இனத்தைக் தனக்குச் சுற்றமாக எண்ணுவதால்
தவறான பாதையில் செல்ல வாய்ப்பு உள்ளது.
Thursday, 7 February 2019
Aram
குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
எம் எஸ் கே விளக்கம் . இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் யாராக அரசனாகவும் சாதாரண மனிதனாக இருந்தாலும் மனிதாபிமானத்துடன் மக்களைக் காப்பாற்றினால் அவன் தெய்வம் ஆகலாம் என்கிறார். ஆனால் ஒரு மனிதன் தனி மனிதன் நாட்டிலுள்ள எல்லா மக்களையும் காப்பாற்ற இயலாது. ஆதனால் ஒரு மன்னன்/ அரசன் நாட்டை ஆளும் சக்தி எல்லா வகையான தகுதி படைபலம் பொருள்வளம் அரசவை இருப்பதால் மன்னனை இறை என்றார்.
1.முறைசெய்து :- அரசன் தனது ஆட்சியில் முறையாக மக்களை பாதுகாத்து நல்லவை செய்யவேண்டியதை எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்து தனது நீதி நேர்மை தவறாது அறநெறியுடன் ஆட்சி செய்யும் அரசனே சிறந்த அரசன்.
2.காப்பாற்றும் :- அரசன் தனது குடிமக்களுக்கு துன்பம் ஏற்படும்போதும் பகைவர்கள் நாட்டின் மீது படையெடுக்கும் போது குழந்தைகளையும் பெண்களையும் முதியோர்களையும் முதலில் அரண் அமைத்து காப்பாற்றுவது அதேபோல நாட்டில் பஞ்சம் பசி பிணி என இயற்கை அழிவுகள் வந்தாலும் அப்போதும் நாட்டு மக்களை காப்பாற்றுவது ஒரு அரசனின் தலையாய கடமையாகும்.
3.மன்னவன் மக்கட்கு :- இந்த மாதிரி ஒரு மன்னன் தனது மக்களுக்காக மக்களோடு மக்களாக இருந்து ஆட்சி செய்யும் மன்னவனே இவ்வுலகம் மட்டுமில்லாமல் அவனை
4 இறையென்று வைக்கப் படும்.;- இறை என்றால் சிவன் பரமசிவன் பரம்பொருள் எனப்படும் எல்லோரையும் காப்பாற்றுபவன் கடவுள். அன்பு பாசம் நேசம் இரக்கம் கருணை நீதி நேர்மை வழுவாமல் அருளுடன் அறநெறியை கடைபிடிப்பது மேலும் இந்த குணநலன்களை உடைய தன்மையை இறைவன் என நாம் எடுத்துக் கொள்ளலாம். எனவே
அந்த நாட்டில் உள்ள மக்களும் அந்த அரசனை இறைவன் என்று போற்றுவார்கள்.
உட்கருத்து:- இக் குறள் மூலம் அறிவது என்னவென்றால் *மனிதனும் தெய்வமாகலாம்* எந்த ஒரு மனிதன் இன்னொரு மனிதனை காப்பாற்றும் போது அங்கு அவன் தெய்வமாக போற்றப் படுகிறான்.
நமது பிறப்பு முதல் *தெய்வம் இறைவன் கடவுள்* என்று கோவிலுக்குச் சென்று வழிபடுகிறோம் அப்படியானால் இக்குறளில் மன்னனை அதாவது ஒரு மனிதனை இறை என்று ஏன் கூறுகிறார் என்றால் எந்த மனிதனிடத்தில் மனிதநேயத்துடன் பிறர் துன்பம் அறிந்து உதவி செய்கிறானோ அந்த தன்மையை *தெய்வம்* எனலாம்அதனால்தான் அரசன் மக்களை காப்பாற்றுகிறான் அதனால் தெய்வத்திற்கு உண்டான குணநலன்கள் தன்மை அரசனிடம் இருப்பதால் அவனை இறை என்றார். ஆனால் நாம் அறிவது தெரிந்தது பிறப்பு முதல் நமக்கு அறிவுறுத்தி வந்தது
*தெய்வம்* என்றால் கோவிலில் இருக்கும் தெய்வ வடிவில் உள்ள உருவங்கள் தான் நமக்கு தெரியும். ஆனால் இக்குறளில் மனிதனை தெய்வமாக்குகிறார்.
Monday, 14 January 2019
Subscribe to:
Posts (Atom)