Monday, 26 August 2019
குறள் 451: ( நாள்)
குறள்பால்: பொருட்பால்.
குறள் இயல்:அரசியல்.
அதிகாரம்:46. சிற்றினஞ்சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
எம் எஸ் கே விளக்கம்:- ஆறறிவு கொண்ட மனிதனுக்கு தான் எந்த இன மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற பகுத்தறிவு வேண்டும். இளம் சிறியவர்கள் பச்சை மரத்தை போல எளிதில் வளையும் தன்மை குணத்தில் இருக்கும். அதனால் தீய எண்ணம் கொண்ட இன மக்களுடன் தவறாக சேர்ந்துவிட்டால் எளிதில் அவர்களுடைய குணம் அதேபோல மாறிவிடும்.
1.சிற்றினம் அஞ்சும்:- சிற்றினம் என்றால் குழந்தையாக பிறந்து 18 வயது வரை மனிதனாக மாறும் வரை உள்ள காலத்தை சிற்றினம் அதாவது இளமை காலம் எனலாம். இக்காலத்தில் சிறுவர்களின் இதயமும் எண்ணமும் மிகவும் மிருதுவானது. களிமண் ஈரத்துடன் இருக்கும்போது அழகான சிற்பமாகவும் மாற்றமுடியும் எந்த வடிவம் வேண்டுமானாலும் செய்ய முடியும். அதனால் சிறுவயதில் உள்ளவர்களை மிகவும் கவனமாக கையாண்டு வளர்க்க வேண்டும் அதனால்தான் சிற்றினம் ==தீய ஒழுக்கங்கள் உடைய இன மக்களாகிய சிற்றினம் கண்டு அஞ்ச வேண்டும் என்கிறார். காரணம் என்னவென்றால்
2. பெருமை சிறுமைதான்:-
இளைஞர்கள் தனது அறியா பருவத்தில் சிறுமையை பெருமையாக எடுத்துக் கொள்வார்கள். அதாவது தீய பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுடன் சிறுவர்களும் சேர்ந்து பழகும் பொழுது தீய ஒழுக்கங்கள் சிறுவர்களுக்கு சாதகமாக எளிதாக மனதில் பதிந்து கெட்ட பழக்க வழக்கமாக மாறிவிடும்.
2.சுற்றமாச் சூழ்ந்து விடும்.:-
எனவேதான் அவர்களை வளர்க்கும் சுற்றுச்சூழல் நல்ல விதமாக இருக்க வேண்டும் *இளமையில் கல்* என்றார்கள் அதுபோல இளமைப் பருவத்திலே எல்லாவகையான கலைகளையும் நூல்களையும் கற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். அவன் சிறந்த குடிமகனாகவும் நல்லொழுக்கம் உடையவனாகவும் எதிர்காலத்தில் சான்றோராகவும் மாற முடியும்.
உட்க்கருத்து:- பெரியோர்கள் ஒழுக்கமற்ற தவறான இயல்புடைய இனத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்கிவிடுவர். ஆனால் சிறியோர் இயல்பு அந்த இனத்தைக் தனக்குச் சுற்றமாக எண்ணுவதால்
தவறான பாதையில் செல்ல வாய்ப்பு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment