Saturday, 14 July 2018

Valluvar

https://youtu.be/PNvWEFSnvfQ

அனைவருக்கும் திருக்குறள் வணக்கம் இந்த  பதிவு என்னவென்று பார்ப்போம். 

நமது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1911 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டது. 

சுதந்திரம் அடைந்த பின்பு அதையே  இந்திய அரசாங்கம் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்வார்கள். 
மேறாகண்ட பதிவில் அதைத்தான் ஆங்கிலத்தில் ஒவ்வொரு ஜாதி வாரியாக அன்றைய மக்கள் தொகை எவ்வளவு உள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளது. 

முன்பு ஒரு காணொளியில் 1911 ஆம் ஆண்டு மக்கள் தொகை படி நமது குல இன மக்கள் 0.35 சதவீதம் தான் இருந்தார்கள். 

(The population of India in 1911 was 252,093,390, )

 1911ல் கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகை 25.5 கோடி பேர் இருந்தார்கள்.

மேற்கண்ட படத்தில்
Caste and Trbes மக்கள் தொகை கணக்கெடுப்பாக தெரிகிறது.

அதன்படி நமது குல மக்களின் தொகை 0.31%   ஆகும். 


 அன்றய மக்கள் தொகைப்படி நமது குல மக்கள் தொகை 63493 மட்டுமே 
எனத் தெரிய வருகிறது.  
அதாவது கடந்த 113 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவ குல மக்கள் தொகை 
63 493 என்று கணக்கிடப்பட்டுள்ளது.  கடந்த 2010ஆம் ஆண்டு  வள்ளுவர் மக்கள் தொகை 96000 என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

அப்படி என்றால் கடந்த 100 ஆண்டுகளில் 30000 மட்டும்தான் அதிகரித்துள்ளதா என RTI விண்ணப்பித்து கேட்க வேண்டும். 

அதற்கு மேலோட்டமான காரணங்கள்  வள்ளுவ குல மக்கள் யாரும் தங்களை மக்கள் தொகை கணக்கு எடுக்கும் பொழுது வள்ளுவன் எனத் தெரிவித்துக் கொள்வது இல்லை எனத் தோன்றுகிறது. 

அல்லது தங்களை வேற்று இன மக்கள் என்று காட்டி விட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இனிமேலாவது இந்த முறை மக்கள் தொகை கணக்கு எடுக்கும் பொழுது வள்ளுவர் என்று அனைத்து மக்களும் கர்வத்துடன் பெருமையுடன் தெரிவிங்கள் அப்பொழுதுதான் தமிழகத்தில் உள்ள நமது குல மக்களின் உண்மையான மக்கள் தொகை எவ்வளவு எனத் தெரியவரும்.

நன்றி.

Valluvar community

https://youtu.be/5loVWIZ1PWo